கொரோனாவைக் குணப்படுத்தும் ரெம்டிசிவிர் - அமெரிக்க மருத்துவ அதிகாரிகள் தகவல்
ரெம்டிசிவிர் என்னும் தடுப்பு மருந்து கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைவதற்கு உதவுவதாக அமெரிக்க மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கைலீட் சயின்சஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் என்னும் மருந்தைக் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து அதிபர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ அதிகாரி அந்தோணி பாசி, நோயாளிகள் விரைவில் குணமடைவதில் குறிப்பிடத் தக்க நேர்மறை விளைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மருந்தை 5 நாள் கொடுத்துச் சிகிச்சை அளித்தபோது ஏற்பட்ட அதே முன்னேற்றம், 10 நாள் கொடுத்துச் சிகிச்சை அளித்தபோதும் ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா அறிகுறி தென்பட்ட 10 நாட்களுக்குள் மருந்தை உட்கொண்ட நோயாளிகளுக்குக் கிடைத்த பயன், அறிகுறி தென்பட்ட 10 நாட்களுக்குப் பின் மருந்தை உட்கொண்டவர்களுக்குக் கிடைத்ததைவிட அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments