கொரோனா சூழ்நிலையை பொருத்தே நாடாளுமன்ற கூட்டத்தொடர்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று அவர் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற கூட்டம் நடத்துவது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய வெங்கையா நாயுடு, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்து வருகின்றன என்றார். எனவே வழக்கமான காலத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Spoke to almost all the Rajya Sabha members including newly elected members over phone during the last few days. Glad to know that they are playing an active role in the national battle against #COVID19 and are engaged in welfare activities in their constituencies. #Covid19India
— Vice President of India (@VPSecretariat) April 29, 2020
Comments