கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரித்தோம்- WHO

0 2386
140 நாடுகளில் பரிசோதனைகளை அதிகப்படுத்தப் போவதாகவும் அறிவிப்பு

கொரோனாவைப் பற்றி உலகநாடுகளை முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார மையத்தின் அவசர சிகிச்சைகள் பிரிவு இயக்குனர் மைக் ரையன், ஒவ்வொருநாளும் செய்தியாளர் சந்திப்பில் எச்சரிக்கைகளை விடுத்ததாக தெரிவித்தார்.

சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளியை கொரோனா வைரஸ் மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வைரஸ் பரவிக் கொண்டு இருப்பதை உணர்ந்து, மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வரும் காலங்களில் 140 நாடுகளில் மிகப்பெரிய அளவில் அனைத்து வகை பரிசோதனைகளும் அதிகரிக்கப்படும் என்றும் மைக் ரையன் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments