மே 3 முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - மத்திய உள்துறை அமைச்சகம்

0 29689

மே 3 ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கான புதிய வழிகாட்டல் நெறிமுறைகளை அடுத்து வரும் நாட்களில் வெளியிட இருப்பதாகவும் அவை மே 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை ஏற்கனவே உள்ள ஊரடங்கு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments