சென்னையில் வேகமெடுத்த கொரோனா பலி, பாதிப்பு அதிகரிப்பு

0 4011
தமிழ்நாட்டில், மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில், ஒரே நாளில், 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில், ஒரே நாளில், 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகள், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவைத் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை, செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஒரே நாளில் 104 பேருக்கு, பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,162ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, தீவிர உயர் சிகிச்சைக்குப் பின், 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து, பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 1,210 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 27ஆம் தேதி உயிரிழந்த நிலையில், கொரோனாவால் மரணம் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில், இதுவரை, கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 27ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments