பஞ்சாபில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு
பஞ்சாபில் மே மூன்றாம் தேதிக்குப் பின்னர் மேலும் இரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நாள்தோறும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும், அந்த நேரத்தில் பொதுமக்கள் கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இந்த புதிய விதிகளின் படி ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாபில் 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 71பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 19பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.
#WATCH Lockdown will be lifted from 7 am to 11 am every day; during this time people can come out of their houses and shops will be opening. Also, we have decided to extend the curfew in the state by two more weeks: Punjab Chief Minister Captain Amarinder Singh. #COVID19 pic.twitter.com/tHTaE22NYB
— ANI (@ANI) April 29, 2020
Comments