அமெரிக்காவில் H-1B விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்புவது கட்டாயம்

0 30169
அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டினரில் சுமார் 2 லட்சம் பேர் வரும் ஜூன் மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டினரில் சுமார் 2 லட்சம் பேர் வரும் ஜூன் மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள்  H-1B விசாவில்  பணியாற்றி வருகின்றனர். H-1B விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது.

அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் H-1B விசாவில் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில்,  மாற்று வேலையைத் தேட வழியில்லை என்பதுடன்  60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காகவும் அனுமதி கோர முடியாது.

ஏற்கனவே பலர் 30 முதல் 40 நாட்கள் வரையிலான காலத்திற்கு வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் இருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் H-1B விசாவில் பணியாற்றும் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள்  தாய்நாட்டிற்குத் திரும்பும்  நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

ஆனால சர்வதேச விமான சேவைகள் இல்லாததால் அவர்கள் எப்படி வருவார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments