ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடன் நீக்கம் தகவலை ராகுல் காந்தி திரித்துப் பேசுகிறார் -அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் கடன் நீக்கம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திரித்துப் பேசுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்று ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் பாஜக வை தாக்கி பதிவிட்டார். அதற்கு டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ள நிர்மலா சீத்தாராமன், வாராக்கடன் விதிகளின் படியே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும், கடனை திரும்ப வசூலிக்கும் முயற்சிகள் தொடரும் என்றும் கூறி இருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொதுத்துறை வங்கிகள் அளித்த ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 226 கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை மறந்து விட்டு, ராகுல் காந்தி இந்த விவகாரத்தை மக்களிடம் திசை திருப்புவதாக நிர்மலா சீத்தாராமன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Comments