மத்திய அரசின் ஐவர் குழு சித்தா மருத்துவமனையில் ஆய்வு

0 940

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழு, இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள சித்தா மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலர் திருப்புகழ் தலைமையிலான மத்திய குழுவினர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட், சுகாதார நிலையங்கள், வங்கிகள், குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில், இன்று அண்ணா நகரில் உள்ள சித்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கபசுர குடிநீரின் நன்மைகள், நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்கள் ஆகியவற்றை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments