பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை 3 மடங்கு வேகத்தில் முடிக்கத் திட்டம் - அமைச்சர் நிதின் கட்கரி

0 2472

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த நெடுஞ்சாலைத் திட்டங்களை மூன்று மடங்கு வேகத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அமைச்சர், மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், மாநிலப் போக்குவரத்து அமைச்சர்கள் ஆகியோருடன் காணொலியில் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், நெடுஞ்சாலைப் பணிகளை இப்போது நடைபெறுவதைவிட 3 மடங்கு வேகத்துக்கு விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க ஏதுவாக நிலம் கையகப்படுத்தலை விரைவுபடுத்துமாறு அவர் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார். 5 லட்சம் கோடி டாலர் என்கிற பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்குப் போக்குவரத்து வசதிகளும், உட்கட்டமைப்பு வசதிகளும் தூண்டுகோலாக இருக்கும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments