CSK போல வேறு எந்த அணியிலும் குடும்பம் போன்ற சூழல் இல்லை - டிவைன் பிராவோ

0 8548

சென்னை சூப்பர் கிங்ஸ் (csk) போல வேறு எந்த அணியிலும் குடும்பம் போன்ற இணக்கமான சூழலை கண்டதில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி போல, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளில் நடைபெறும் போட்டிகளிலும் பிராவோ விளையாடி வருகிறார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்களை குடும்ப உறுப்பினர்களை போல வரவேற்கும் தன்மை கொண்டது என்றார்.

தாம் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருப்பதாகவும், ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணியை காண முடியும் என்றோ அல்லது அந்த அணியில் நிலவிய இணக்கமான சூழலை வேறு அணியில் பெற முடியும் என்றோ தாம் நினைக்கவில்லை என்றும் பிராவோ கூறினார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments