ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு முழு ஆதரவு -ஹிலாரி கிளிண்டன்
நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, கடந்த முறை அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வுக்கான உள்கட்சித் தேர்தலில் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில் ஜோ பிடனுடன் நடத்திய காணோலி ஆலோசனையின் போது தமது ஆதரவை தெரிவித்த ஹிலாரி கிளிண்டன், அவரை தான் மட்டுமின்றி அமெரிக்கர்கள் பலரும் தங்களது அதிபராக ஏற்கனவே ஏற்றுக் கொண்டதாக கூறினார்.
கொரோனா விவகாரத்தில் டிரம்ப் திணறுவதை சுட்டிக் காட்டிய ஹிலாரி இந்த நேரத்தில் ஜோ பிடனை போன்றவர்கள் அதிபராக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் எனவும் தமது ஆதங்கத்தை தெரிவித்தார்.
I wish we had @JoeBiden's leadership in the Oval Office right now.
— Hillary Clinton (@HillaryClinton) April 28, 2020
Americans deserve a president who will manage the COVID-19 crisis with the compassion, competence, and respect for science we need to save lives and revive the economy.
Join us today: https://t.co/mxkpLIOEux pic.twitter.com/9TE9Lw9XBw
Comments