பெருங்குடல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த இந்தி நடிகர் இர்பான் கான் காலமானார்

0 20400
மும்பை மருத்துவமனையில் பெருங்குடல் தொற்றால் பாதிக்கப்பட்டு ( colon infection) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மும்பை மருத்துவமனையில் பெருங்குடல் தொற்றால் பாதிக்கப்பட்டு ( colon infection) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவருக்கு வயது 53 ஆகும். ஸ்லம்டாக் மில்லியனர், லைப் ஆப் பை (life of pi) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், 2018ம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் மும்பை தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை இர்பானின் தாயார் உயிரிழந்த நிலையில், இர்பானும் தற்போது மரணமடைந்துள்ளார்.

இர்பான் கானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவரின் உயிரிழப்பு உலக சினிமாவுக்கும் (world cinema) திரையரங்கங்களுக்கும் (theatre)இழப்பு என்றும், இர்பான் கான் எப்போதும் பன்முக நடிப்புகளுக்கு நினைவுகூரப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments