இந்தியாவில் குறைந்து வரும் சிவப்பு மண்டலம்
கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களில் அதிக மாவட்டங்களில் பரவியிருந்தாலும், அதிகப் பாதிப்புக்குள்ளான சிவப்பு மண்டலங்களில் மாவட்டங்களின் எண்ணிக்கை 129ஆகக் குறைந்துள்ளது.
மார்ச் 25ஆம் தேதி முதல் 3 வாரங்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்திய பின் ஏப்ரல் 15ஆம் தேதி 177 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பட்டியலில் இருந்தன. 40 நாள் ஊரடங்கு முடியப் போகும் நிலையில் சிவப்பு மண்டலப் பகுதி 129 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி ஆரஞ்ச் மண்டலத்தில் 207 மாவட்டங்கள் இருந்த நிலையில் இப்போது 250 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது. சிவப்பு மண்டலத்தில் உள்ளவற்றில் 20 மாவட்டங்கள் மட்டும் நாட்டின் மொத்தக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 60 விழுக்காட்டைக் கொண்டிருக்கின்றன. மே மூன்றாம் தேதிக்குப் பின் ஊரடங்கைத் தளர்த்துவது இந்த அடிப்படையிலேயே இருக்கும் எனக் கூறப்படுகிறது. 14 நாட்களாகப் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலமாகும். 28 நாட்களாகப் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் பசுமை மண்டலமாகும்.
Comments