வெளிமாநிலங்களில் சிக்கிய 10 லட்சம் தொழிலாளர்களை அழைத்துவரத் திட்டம் - உத்தரப்பிரதேச அரசு
வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பத்து லட்சம் பேரைத் திருப்பி அழைத்து வருவதற்கான வேலைகளை உத்தரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.
இதனால் பேருந்துகள் மூலம் 10 லட்சம் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துவர உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவதற்கு 2 வாரக் காலம் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்து வரப்படுபவர்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்களை 14 நாட்கள் தனிமைக் கண்காணிப்பில் வைக்கவும், அறிகுறி உள்ளவர்களை மருத்துவமனைகளில் சேர்க்கவும் ஏற்பாடுகளைச் செய்யும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Comments