ரூ.1 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களுடன் ஒரு வாரமாக புதுச்சேரி எல்லையில் நிற்கும் லாரிகள்
புதுச்சேரி எல்லையில் கடந்த ஒரு வாரமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களுடன் நின்றிருக்கும் லாரிகளின் ஓட்டுநர்கள், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
கோவாவிலிருந்து தமிழகம் வழியாக வந்த அந்த 11 லாரிகளும் புதுச்சேரி அரசின் அனுமதி கிடைக்காமல் எல்லையில் ஒரு வாரமாக நின்று கொண்டிருக்கின்றன. ஊரடங்கால் மது கிடைக்காமல் சுற்றும் குடிமகன்களில் சிலர் இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் வந்து மது கேட்டு மிரட்டுவதாகவும் தங்களது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி லாரி ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானம் செய்து கலைந்துபோகச் செய்தனர்.
Comments