இந்தியா மீதான அமெரிக்க அமைப்பின் விமர்சனத்திற்கு வெளியுறவுத்துறை கண்டனம்

0 8377

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான, அமெரிக்க ஆணையம் வெளியிட்ட அறிக்கைக்கு வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, இந்தியா மீதான அமெரிக்க அமைப்பின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு எதிரான அந்த அமைப்பின் கருத்துக்கள் புதியவை இல்லை என்றாலும், இந்தமுறை அதன் தவறான விளக்கம் புதிய நிலைகளை எட்டியுள்ளது என்றார். குறிப்பிட்ட அக்கறை கொண்ட அந்த அமைப்பை அதன் போக்கிலேயே இந்திய அரசு கையாளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments