மருந்து உற்பத்தி துறையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் ... கனடா பிரதமர் ட்ரூடோவிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு உதவும் வகையில், மருந்து உற்பத்தி துறையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நேற்று அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பூசி அல்லது நோய்த்தொற்றை குணப்படுத்தும் தீர்வை கண்டறிவதற்கான ஆய்வை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மருந்து உற்பத்தியில் உலக நாடுகளுக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்றும், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து விநியோகம் தடையின்றி நடைபெறும் என்றும் ட்ரூடோவிடம் மோடி உறுதியளித்தார்.
Had a warm exchange with PM @JustinTrudeau. Thanked him for looking after Indian citizens in Canada in these difficult times. Collaboration and partnership between India and Canada is vital to fighting the pandemic including through medical research and supply chain management.
— Narendra Modi (@narendramodi) April 28, 2020
Comments