வாட்ஸ் ஆப் செயலின் குழு அழைப்பு மூலம் 8 பேர் வரை இணைந்து பேசும் வசதி அறிமுகம்

0 3385

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் ஆப் செயலின் குழு அழைப்பு மூலம் 8 பேர் வரை இணைந்து பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்கள் அதிகப்படியான ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, இதற்கு முன்பு 4 பேர் மட்டுமே ஆடியோ மற்றும் வீடியோ காலில் இணைந்து பேசும் வசதியை கொண்டிருந்த வாட்ஸ்-ஆப் செயலி,  தற்போது 8 பேர் பேசும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை பெற பயனாளர்கள் அனைவரும் கூகுள் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். வழக்கம்போல் அழைப்புகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே அழைப்பை மேற்கொள்பவர் தவிர்த்து 7 பேரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், அடிக்கடி உரையாட கூடிய நபர்களின் எண்களை தேர்ந்தெடுத்து அழைப்பிற்கான குழுவை ஏற்படுத்தும் அம்சத்துடன், பெருந்திரையில் பயன்படுத்தும் போர்ட்டல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments