வாட்ஸ் அப் வீடியோகாலில் ஐ.டி பெண் ஊழியர் திருமணம் ..! செல்போனுக்கு தாலி கட்டிய மணமகன்

0 21240
கொரோனா ஊரடங்கால் திருமணம் தடைபட்டு விடக்கூடது என்று உத்தரபிரதேசத்தில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்துவரும் மணமகளுக்கு, கேரளாவின் கோட்டயத்தில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ காலில் வங்கி ஊழியர் தாலிகட்டிய அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது. சடங்கு சபிரதாயங்களுடன் இருமணம் கலப்பதே திருமணம் என்று நடந்த செல்போன் திருமணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கொரோனா ஊரடங்கால் திருமணம் தடைபட்டு விடக்கூடது என்று உத்தரபிரதேசத்தில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்துவரும் மணமகளுக்கு, கேரளாவின் கோட்டயத்தில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ காலில் வங்கி ஊழியர் தாலிகட்டிய அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது. சடங்கு சபிரதாயங்களுடன் இருமணம் கலப்பதே திருமணம் என்று நடந்த செல்போன் திருமணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

உறவினரும் ஊராரும் கூட... மணமகனும் மணமகளும் நடந்து வர... ஊரே அதிர... ஆட்டம் பாட்டத்துடன் நடக்கும் கேரள திருமணங்களுக்கு மத்தியில் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே இருந்து 2500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணமகளுக்கு தாலி கட்டி அசத்திய மணமகன் ஸ்ரீஜித் நடேசன் இவர் தான்.

 கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த ஜங்கனசேரியை சேர்ந்த 30 வயது வங்கி ஊழியர் ஸ்ரீஜித்துக்கும் உத்திரபிரதேச மாநிலம், ஹரிபட் அடுத்த பள்ளிபட் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கேரளாவை சேர்ந்த அஞ்சனா என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 9ந்தேதியே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ந்தேதி திருமணம் செய்து கொள்வது என்று தேதியும் குறிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கால் மணப்பெண் அஞ்சனாவால் கேரளாவுக்கு வர இயவில்லை.

இதையடுத்து அவரவரர் வசிக்கும் இடத்தில் இருந்தே திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்று காலை மணப்பெண் அஞ்சனா , அலங்காரத்துடன் , தனது தாய் மற்றும் சகோதரருடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் தோன்ற , கோட்டயத்தில் முக்கிய உறவினர்களுடன் காத்திருந்த மணமகன் ஸ்ரீஜித் நடேசன், செல்போனில் தோன்றிய அஞ்சனா வீடியோவுக்கு மஞ்சள் தாலியை கட்ட, அங்கு அஞ்சனா தங்கத்திலான தாலியை தனக்கு தானே கட்டிக்கொண்டார்

மங்கலவாத்தியம் இல்லை, அடம்பர ஆட்டம் பாட்டம் இல்லாமல் இருமணம் கலக்க டெக்னாலஜி துணையுடன் இனிதே நடந்து முடிந்தது இந்த செல்போன் திருமணம்.

ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்து விருந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக மணமகன் ஸ்ரீஜித் நடேசன் தெரிவித்தார்.

அதுவரை புதுமண தம்பதி அலைபாயுதே ஜோடிகள் போல அவரவர் வீட்டிலேயே தனித்திருக்க முடிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் செலவு மிச்சம் என்று பெண் வீட்டார் எல்லோரும் செல்போன் திருமணங்களை கையில் எடுத்தால், தொட்டு தாலி கட்டினேன் என்று இனி எந்த கணவரும் ஜம்பம் அடிக்க இயலாமல் போய்விடும் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments