கொடூர கரம் நீட்டும் கொரோனா 30 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு

0 4420
ஒரே நாளில் ஆயிரத்து 594 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதால், கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதுவரை, 945 பேர், உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் ஆயிரத்து 594 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதால், கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதுவரை, 945 பேர், உயிரிழந்துள்ளனர்.

ஆட் கொல்லி நோயான கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து, பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கையும், உயிர் பலியும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில், ஆயிரம்
பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் 8 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட, அங்கு கொரோனா 369 பேரை காவு வாங்கி விட்டது.

குஜராத்தில் 3 ஆயிரத்து 548 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு, உயிரிழப்பு 162 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்ட, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வைரஸ் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 400 ஐ நெருங்கி வருகிறது.

உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இதேபோல, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரில் பாதிப்பு 565 ஐ எட்ட, கர்நாடகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 500 ஐ கடந்து விட்டது.

கேரளா, கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளதால், அங்கு பாதிப்பு 485 என்ற நிலை நீடித்து வருகிறது.

பீஹார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு, உயர்ந்து வருகிறது.

ஹரியானாவில் வைரஸ் தொற்று பாதிப்பு, 300 ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 594 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 22 ஆயிரம் பேர், சிகிச்சை பெற்று வரும் சூழலில், சுமார் 7 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

இந்தியா முழுவதும் வைரஸ் தொற்றால், 30 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா உயிரிழப்பு 945 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments