வேகம் தணியாத கொரோனா உலக நாடுகள் திணறல்
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா தொற்று நோயின் கோர பிடியில் சிக்கி திணறி கொண்டிருக்கின்றன உலக நாடுகள். உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 80 ஆயிரத்தையும், பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்தையும் தாண்டியிருந்தது.
உலக வல்லரசான அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது. இதேபோல் அமெரிக்காவில் பலி எண்ணிக்கையும் 56 ஆயிரத்தை தாண்டியது.
உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து, ஸ்பெயினில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 23 ஆயிரத்து 800 பேர் பலியாகியிருந்தனர். இதற்கடுத்து இத்தாலியில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் பேரும், பிரான்சில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரும், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளிலும் தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதால், உலகில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு நபர்களை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 19 லட்சத்து 39 ஆயிரம் பேர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவர்களில் 56 ஆயிரம் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதுபோக உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பிறகு, கொரோனாவில் இருந்து சுமார் 9 லட்சத்து 29 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Comments