நுங்கம்பாக்கம் தலைமைக் காவலருக்குக் கொரோனா
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலைக் காவலருக்கும், உளவுத்துறைக் காவலர் ஒருவருக்கும் கொரோனா உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக்காவலருக்குக் கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, நுங்கம்பாக்கம் உளவுத்துறைக் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க உள்ளனர். காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் கொரோனா கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது.
Comments