கடனை அடைக்க ரிலையன்சின் திட்டம்..!
நிறுவனத்தின் கடன் அளவை குறைப்பதற்காக ஏற்கனவே உள்ள பங்கு முதலீட்டாளர்களுக்கு மேலும் கூடுதலாக பங்குகளை விற்று நிதி திரட்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சந்தை மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ரிலையன்சுக்கு 2019 மார்ச் நிலவரப்படி 1,52,000கோடி ரூபாய் (20 பில்லியன் டாலர்) கடன் உள்ளது. 2021 ல் அதை பூஜ்யம் கடனாக மாற்ற உள்ளதாக முகேஷ் அம்பானி முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால் கொரோனா காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தை வீழ்ச்சி அடைந்ததாலும், சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்திற்கு பங்குகளை விற்கும் முயற்சிக்கு மத்திய அரசு தடை கோரியதாலும், அம்பானியின் திட்டம் பலிக்கவில்லை. இந்த நிலையில் கடனை ஓரளவு சரிசெய்ய உதவும் இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் வரும் 30 ஆம் தேதி வெளியிடும் என கூறப்படுகிறது.
Comments