எஞ்சியுள்ள சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கு ஊரடங்கு முடிந்ததும் தேர்வு
ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு எஞ்சியுள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங்கிடம், ட்விட்டர் மூலம் லக்னோவை சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கேள்வியெழுப்பி இருந்தார்.
அதற்கு பொக்ரியால் அளித்துள்ள பதிலில், நாடு தழுவிய ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு, இயல்பு நிலை திரும்பியதும், சிபிஎஸ்இ தேர்வு குறித்த அட்டவணையை மத்திய அரசு வெளியிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கில் வீடுகளில் இருக்கும் மாணவர்களை நாள்முழுவதும் படிக்கும்படி பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ள அவர், எப்போது தேர்வு அறிவிக்கப்பட்டாலும் அதற்கு தங்களகு பிள்ளைகளை தயார் நிலையில் வைத்திருந்தால் போதும் எனவும் கூறியுள்ளார்.
Comments