கொரோனா வைரஸ் 10 விதமான மரபியல் மாற்றங்களை எடுத்துள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் தகவல்

0 3167

 இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ் 10 விதமான மரபியல் மாற்றங்களை எடுத்துள்ளதாகவும் அதில் A2a என்ற மரபணு மாற்ற வைரஸ், தொற்றை ஏற்படுத்துவதில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

A2a மரபணு மாற்ற வைரஸ் அதிக எண்ணிக்கையில் நுரையீரலுக்குள் நுழையும் சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. தொற்றை பரப்புவதில் அதிக திறன் வாய்ந்த தாக இருப்பதால், உலக அளவில் அது சர்வசாதாரணமாக பரவுகிறது என் மேற்கு வங்கத்தில் இருக்கும் National Institute of Biomedical Genomics விஞ்ஞானிகளான நிதன் பிஸ்வாஸ், பார்த்தா மஜும்தார் ஆகியோர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'ஓ' என்ற ஆதார வைரசில் இருந்து இந்த 10 மரபணு மாற்ற வைரசுகளும் உருவெடுத்ததாக கூறும் ஆய்வு, கடந்த மாத இறுதி வாக்கில் இதர வைரசுகளை ஓரங்கட்டி விட்டு A2a வைரஸ் விஸ்வரூபம் எடுத்து விட்டது என்றும் தெரிவிக்கிறது.கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படும் இந்த ஆய்வு விரைவில் ஐசிஎம்ஆரின் மருத்துவ இதழில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments