மகாராஷ்டிர காவல்துறை அறக்கட்டளைக்கு அக்‌ஷய் குமார் ரூ.2 கோடி நன்கொடை

0 3073

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மும்பை காவல்துறையினருக்கு உதவும் வகையில் இந்தி நடிகர் அக்சய் குமார் 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

மத்திய அரசின் கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு ஏற்கெனவே 25 கோடி ரூபாயை அவர் நன்கொடையாக அளித்திருந்தார். இந்நிலையில் மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு அவர் 2 கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.

ட்விட்டரில் இந்தத் தகவலை தெரியப்படுத்தி அக்சய் குமாருக்கு மும்பை காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் (Param Bir Singh) நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து அக்சய் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனாவுக்கு உயிரிழந்த காவலர்கள் சந்திரகாந்த் பன்டுர்கர், சந்தீப் சர்வேக்கு மரியாதை செலுத்துவதாகவும், அவர்களை போன்றவர்களால்தான் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments