கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு..!
தேவை சரிந்ததாலும், சேமிக்க இடமில்லாததாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் உலக அளவில் பொருளாதார செயல்பாடுகள் முடங்கி, எரிபொருள் நுகர்வு வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏற்கெனவே கச்சா எண்ணெய் இருப்பில் உள்ள நிலையில், புதிதாக வாங்கும் கச்சா எண்ணெயை சேமிப்பதற்கு இடமில்லை.
ரஷ்யா உள்ளிட்ட எண்ணெய் ஏற்றுமதி நாடுகள், மே 1ஆம் தேதி முதல், 1 கோடி பேரல்கள் அளவுக்கு உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் கச்சா எண்ணெய் தேவையில் 3 கோடி பேரல்கள் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, 1 கோடி பேரல்கள் உற்பத்தி குறைப்பு என்பது போதாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், WTI ரக கச்சா எண்ணெய் விலை மேலும் 7 சதவீதம் அளவுக்கு சரிந்து பேரலுக்கு 12 டாலர்களாக இருந்தது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலையும் சரிந்து பேரலுக்கு 19.72 டாலர்களாக இருந்தது.
Comments