சீனாவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்
சீனாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளின் வெளியேவும் உள்ளேவும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அந்நாட்டில் ஆயிரம் பேருக்கு ஒரு கேமரா வீதம் வணிக வளாகங்கள், உணவகங்கள், பள்ளிகள் என 35 கோடி கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க தனிமைப்படுத்தவர்கள் மற்றும் பொது இடங்களில் கூடும் மக்களை கண்காணிக்கும் பொருட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிசிடிவி கேமரா பயன்பாட்டை அந்நாட்டு அரசு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் அரசு தங்கள் வீடுகளில் அனுமதியின்றி, சிசிடிவி கேமரா பொருத்துவது தனியுரிமையை பாதிக்கும் வகையில் உள்ளதாக அந்நாட்டு மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments