உச்சநீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி

0 1764

உச்சநீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக உச்சநீதிமன்ற அலுவல்கள் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் குறைக்கப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உச்சநீதிமன்ற ஊழியர் ஒருவர் 2 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 16ம் தேதி அவர் பணிக்கு வந்தபோது 2 பதிவாளர்களுடன் அருகில் இருந்தபடி பேசியுள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments