கொரோனா ஊரடங்கு குறித்து முரண்பட்ட அறிக்கைகள் ... மத்திய அரசு மீது முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு...!
கொரோனா ஊரடங்கு குறித்து மத்திய அரசு முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமரின் முதலமைச்சர்களுடனான காணொலி ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் பேசியதன் அடிப்படையில் ஊரடங்கு மே 3-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசு ஒரு ஒருபுறம் கடைகளை திறக்கும் நிலைப்பாட்டுடன் மறுபுறம் ஊரடங்கை எப்படி அமல்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். மாநிலங்களில் ஆய்வு செய்யும் மத்தியக் குழு அறிவுறுத்தல்களை மட்டும் முன்வைப்பதாகவும் ஆனால் கொரொனாவை எதிர்த்துப் போராட நிதியுதவி மத்திய அரசின் கண்ணில் காட்டப்படுவதில்லை என்றும் மம்தா குற்றம்சாட்டினார்.
Comments