ஈரானின் 'நூர்' செயற்கைக் கோளை கண்காணிப்பதாக அமெரிக்கா தகவல்
ஈரான் விண்ணில் செலுத்தியுள்ள ‘நூர்’ செயற்கைகோளுக்கு உளவுத்துறை தகவல்களை வழங்கும் திறன் கிடையாது என அமெரிக்க விண்வெளி படையின் தலைவர் ஜான் ரேமண்ட் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஜனவரி மாதம் ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உருவானது.
இந்த நிலையில் ஈரான் தனது முதல் ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
இது குறித்து ஜான் ரேமண்ட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஈரானின் ‘நூர்’ செயற்கைகோளை அமெரிக்கா விண்வெளி படை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
@US_SpaceCom continues to track 2 objects @PeteAFB’s @18SPCS associated w/#space launch from Iran, characterizing NOUR 01(#SATCAT 45529) as 3U Cubesat. Iran states it has imaging capabilities—actually, it’s a tumbling webcam in space; unlikely providing intel. #spaceishard
— Gen. Jay Raymond (@SpaceForceCSO) April 25, 2020
Comments