அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 22 பேர் குணமடைந்தனர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 பேர் தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த 14 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு பின்னர், நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று நீங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 22 பேருக்கும் பழங்கள் கொடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் வீட்டிலேயே 14 நாட்களுக்கு தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 127 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments