வவ்வால் குகைகளில் வைரசை தேடும் ஆராய்ச்சியாளர்கள்
கொரோனா தொற்றுக்கும் வவ்வால்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில் பல நாடுகளில் வவ்வால் குகைகளில் சென்று அவற்றின் ரத்தம் மற்றும் ஸ்வாப் மூலம் வைரசுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் சுமார் 15 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புதிதாக வரும் தொற்றுடன் ஒப்பிடப்பட்டு வைரசின் மூலத்தை கண்டுபிடிக்க முயற்சி நடைபெறுகிறது.
EcoHealth Alliance என்ற அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பீட்டர டஸ்ஸாக்( Peter Daszak) சீனாவின் யுன்னான் மாகாணத்தின் வவ்வால் குகைகளில் கடந்த 2013 ல் சேகரித்த மாதிரிகளில் காணப்பட்ட வைரஸ் இப்போது பரவும் கொரோனா வைரசின் மூதாதையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கொரோனா, எபோலா வைரசுகளின் ஆதிமூலத்தை கண்டுபடிப்பது மட்டுமின்றி மனித குலத்தை எந்த வைரஸ் அடுத்தபடியாக தாக்கும், அதை தடுக்கும் வழி என்ன போன்றவற்றுக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் உதவிகரமாக உள்ளனர்.
Comments