அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டு விடுப்புக்கான ஊதியம் ஓராண்டு நிறுத்தம் - தமிழக அரசு
அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறுவதைத் தமிழக அரசு ஓராண்டுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், கொரோனா தொற்றுநோயால் நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆண்டுக்கு 15 நாட்கள், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தேதியில் விடுப்பு ஒப்படைப்புக்கான வேண்டுகோள், பணம் வழங்குவதற்கான பில் நிலுவை எந்த நிலையில் இருந்தாலும் அது பரிசீலனை செய்யப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒப்புதல் ஆணை பெற்றிருந்தாலும் அது ரத்து செய்யப்பட்டு ஈட்டிய விடுப்பு அந்தப் பணியாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மாநில அரசின் கீழ் செயல்படும் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Comments