முழுஊரடங்கால் டன் கணக்கில் காய், கனிகள் தேக்கம் - வியாபாரிகள் கவலை
முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் டன் கணக்கில் காய் கனிகள் தேக்கமடைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவத்துள்ளனர்.
கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 லாரிகளில் சுமார் மூவாயிரம் டன் காய்கறி வரத்து கணப்படுகிறது. இதில், நேற்று 1500 டன் காய்கறிகள் விற்பனையானதாக கூறும் வியாபாரிகள், 1500 டன் காய்கறிகள் கோயம்பேடு சந்தையிலேயே தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் 60 முதல் 70 ரூபாய் என அதிக விலைக்கு விற்பனையான தக்காளி, வெங்காயம், கேரட், பீட்ரூட், உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது, இன்று ஒரு கிலே தக்காளி 10 ரூபாய்க்கும், கத்தரிக்காய் கிலோ 25 ரூபாய்க்கும், பல்லாரி வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் கிலோ 15 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு கிலோ 25 ரூபாய்க்கும், காலிஃபிளவர் 20 ரூபாய்க்கும், இஞ்சி 70 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments