மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு

0 1512

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் சோளிங்கர், பேச்சிப்பாறையில் 4 செ.மீ., சாத்தூர்,விருதுநகர் பகுதியில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments