டி.சி.எஸ். சார்பில் இலவச ஆன்லைன் திறன் மேம்பாட்டு பயிற்சி
ஊரடங்கு காலத்தை இளைஞர்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் விதமாக இலவச ஆன்லைன் திறன் மேம்பாட்டு பயிற்சியை தனியார் மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ். அறிமுகம் செய்துள்ளது.
இந்த பயிற்சியானது ஆன்லைன் மூலம் 15 நாட்களுக்கு நடத்தப்படும் எனவும் டி.சி.எஸ். அறிவித்துள்ளது. சுய விபர குறிப்பை தயார் செய்வது, குழு விவாதத்தில் பங்கேற்பது, நேர்முக தேர்வுகளை அணுகுவது உள்ளிட்ட 15 வகையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை டி.சி.எஸ். கற்று தருகிறது.
இதில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், மாணவர்கள் https://learning.tcsionhub.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் இறுதியில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
Comments