ராஜஸ்தான் பயிற்சி மையத்தில் சிக்கித் தவித்த 391 மாணவர்களை மீட்ட அசாம் அரசு
அசாம் அரசு ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் சிக்கித் தவித்த மாணவர்கள் 391 பேரைப் பேருந்துகள் மூலம் அழைத்துச் சென்றுள்ளது.
ராஜஸ்தானின் கோட்டாவில் தனியார் நுழைவுத்தேர்வுப் பயிற்சி மையத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
இவர்களில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களை அந்த மாநில அரசு பேருந்துகளை அனுப்பி மீட்டுச் சென்றது. இதேபோல் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 391 மாணவர்கள் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குப் பேருந்தில் வந்த அவர்கள் 14 நாட்கள் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.
Comments