ரூ 1 .கோடிக்கும் மேல் வருமானம் இருப்போரிடம் 40 சதவீதம் வரிவிதிப்பா?
ஆண்டு வருவாய் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளவர்களிடமிருந்து 40 சதவீதம் வரி வசூலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்த 50 ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையை பொறுப்பற்ற செயல் எனக்கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. கொரோனா பாதிப்பால் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தொழிலை இழந்து கோடிக்கணக்கானோர் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலையில், பெரும் பணக்காரர்களிடமிருந்து 4 சதவீத கோவிட் நிவாரண மேல்வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு சில வரித்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டன.
இதனால் மக்கள் மத்தியில் பதற்றமும் குழப்பமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த நிதியமைச்சக அதிகாரிகள், இந்தப் பரிந்துரைகள் அரசின் வரிவசூல் கொள்கைக்கு விரோதமானவை என்று தெரிவித்தனர். இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் அவற்றை மக்கள் நிராகரிக்குமாறும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Comments