சிறுவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் முறையை ரத்து செய்தார் சவுதி மன்னர்
சவூதி அரேபியாவில் சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் முறையை ரத்து செய்து அந்த நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
சவூதி அரேபிய பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்றது முதல் அங்கு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதன் முக்கிய நிலையாக சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முறையை நீக்கி மன்னர் சல்மான் தற்போது உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னாக பெண்கள் தனியாக கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த 2018ம் ஆண்டு நீக்கினார். இதனைத் தொடர்ந்து இதுவரை பிரம்படி தண்டனை வழங்கப்பட்ட குற்றங்களுக்கு, அந்த தண்டனைக்குப் பதிலாக சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments