ஊரடங்கு நீடித்தால் லட்சக்கணக்கான மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்
நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இணையவழி மாநாட்டில் பேசிய அவர், சர்வதேச அளவில் கொரோனா தொற்றானது 2 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்திவிடவில்லை என்று குறிப்பிட்டார். முழு முடக்க நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்கு அமலாக்கப்பட்டால் அது லட்சக்கணக்கான மக்களை வாழ்வாதாரத்தின் விளிம்புக்குத் தள்ளக்கூடும் என்றும் சுப்பாராவ் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த இருமாதங்களுக்கு முன்பே சரிந்து விட்டதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டில் 5 விழுக்காடாகிய வளர்ச்சி விகிதம் தற்போது முழுவதும் நின்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
Comments