வடகொரிய அதிபர் நல்ல உடல்நிலையுடன் உள்ளார் - தென்கொரியா

0 3235

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கிம்மிற்கு மேற்கொள்ளப்பட்ட, இதய அறுவை சிகிச்சையால் அவரது உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளிவந்தன. தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து அறிய அந்நாட்டிற்கு சீனா சிறப்பு மருத்துவக் குழுவையும் அனுப்பியது.

இந்நிலையில், கிம் ஜாங் உன் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக தென் கொரிய அதிபரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் மூன் சுங்-இன் கூறியுள்ளார். கடந்த 13ந் தேதி முதல் அவர் வொன்சன் பகுதியில் தங்கி இருப்பதாகவும், சந்தேகத்திற்கிடமான அசைவுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments