உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம்...

0 3491

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த எந்தவித அபராதமும் இன்றி ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட வரிகளை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் கொடுக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும், ஜூன் 30 வரை வரியை செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments