பீகாரில் மின்னல் தாக்கி 3 மாவட்டங்களில் 12 பேர் பலி

0 4364
பீகாரில் மின்னல் தாக்கி 3 மாவட்டங்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோடை மழையின் ஒரு பகுதியாக இடி மின்னலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

பீகாரில் மின்னல் தாக்கி 3 மாவட்டங்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோடை மழையின் ஒரு பகுதியாக இடி மின்னலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் பீகாரின் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

சரண் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வயல் வேலை உள்ளிட்டவற்றுக்காக வெளியில் சென்றபோது மின்னல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதீஷ்குமார் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் பாதிப்பு குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments