கொரோனா விவகாரத்தில் சீனாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும்
கொரோனா விவகாரத்தில் சீனாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று கூறி, அமெரிக்க வாழ் இந்திய பெண் தலைவர் நிக்கி ஹாலி கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்த பல உண்மைகளை சீனா மறைத்துவிட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும், ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராகவும் இருந்த இந்திய வம்சாவளி பெண் தலைவர் நிக்கி ஹாலி, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான கோரிக்கை மனுவாக இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளார்.
1 லட்சம் பேரின் கையெழுத்துக்களை பெற அவர் முடிவு செய்துள்ள நிலையில் இந்த இயக்கத்தை தொடங்கிய சில மணி நேரத்தில் 40 ஆயிரம் பேர் அதில் கையெழுத்து போட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள சீனா தங்களை பலிகடா ஆக்கும் முயறசி பலன் அளிக்காது” என கூறி உள்ளது.
Comments