முழு ஊரடங்கிற்கு மக்களை முன் கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 4808
தமிழகத்தில், 3 மாநகராட்சிகளில் 4 நாள் முழு ஊரடங்கை அறிவிக்கும் முன்பாக, மக்களை முதலில் மன ரீதியாக தயார் செய்திருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 3 மாநகராட்சிகளில் 4 நாள் முழு ஊரடங்கை அறிவிக்கும் முன்பாக, மக்களை முதலில் மன ரீதியாக தயார் செய்திருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில், சனிக்கிழமை அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், காய்கறிகள் வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதிய காட்சியை அறிக்கையொன்றில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மக்களின் நலனை காப்பதே ஓர் அரசின் முக்கிய கடமை என அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஊரடங்கு காரணமாக, தமிழகத்திற்கு திரும்ப முடியாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழக கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments