உச்சம் எட்டிய அச்சம் உலுக்கும் கொரோனாவால் மிரளும் மக்கள்

0 4152
இந்தியாவில் ஒரே நாளில், ஆயிரத்து 975 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கி விட்டது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பு 832 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில், ஆயிரத்து 975  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கி விட்டது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பு 832  ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில், கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதன்படி மஹாராஷ்டிராவில் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்க, அங்கு 323 பேரை கொரோனா, காவு
வாங்கி விட்டது.

குஜராத்தில் பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்து விட, அங்கு, 133 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.

டெல்லியில் வைரஸ் தொற்றால், 2 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு 54 ஆக நீடித்தது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 2 ஆயிரத்தை கடந்து விட்டது.

உத்தரபிரதேசத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 800 ஐ தாண்டி விட்டது.

ஆந்திராவில், கொரோனா பாதிப்பு, ஆயிரத்தை கடந்து விட, தெலங்கானாவில் வைரஸ் தொற்று பாதிப்பு, ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கர்நாடகாவில் 503 பேரும், கேரளாவில் 457 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரில் 523 பேரும், மேற்கு வங்காளத்தில் 611 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 975 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, மொத்தம் 26 ஆயிரத்து 917 பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்ததால்,
கொரோனா பலி எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மொத்தம் 20 ஆயிரத்து 177 பேர் , மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை, 5 ஆயிரத்து 808 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை
அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments