ஏப்.27 ல் பிரதமர் மோடி நடத்த உள்ள காணொலி காட்சி ஆலோசனையில் 9 முதலமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பு

0 33388
திங்கள் அன்று பிரதமர் மோடி நடத்த உள்ள கொரோனா தொடர்பான காணொலி காட்சி ஆலோசனையில் 9 முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

திங்கள் அன்று பிரதமர் மோடி நடத்த உள்ள கொரோனா தொடர்பான காணொலி காட்சி ஆலோசனையில் 9 முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் 20 ஆம் தேதி மோடி நடத்திய முதல் ஆலோசனையில் கொரோனா தடுப்பு குறித்து 8 முதலமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

இரண்டாம் தடவையாக  கடந்த 2 ஆம் தேதி நடந்த ஆலோசனையிலும் 8 முதலமைச்சர்கள் பங்கேற்று ஊரடங்கை விலக்குவது குறித்து விவாதித்தனர்.கடைசியாக கடந்த 11 ஆம் தேதி நடந்த காணொலி காட்சியில் 13 முதலமைச்சர்கள் கலந்து கொண்டு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் 4 ஆம் தடவையாக  மோடி நடத்தும் ஆலோசனையில்   பீகார், ஒடிசா, குஜராத்,அரியானா, உத்தராகண்ட், இமாச்சல், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட முதலமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments