சிலந்தி மனிதன், வவ்வால் மனிதன் வேடமணிந்து பணியாற்றும் தொழிலாளர்கள்
போர்ச்சுகல் நாட்டில் உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் சிலந்தி மனிதன்போன்றும், வவ்வால் மனிதன் போன்றும் வேடமணிந்து பணிகளைச் செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.
போர்ச்சுகல் நாட்டில் 23 ஆயிரத்து 392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 880 பேர் உயிரிழந்தனர். கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 18 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லிஸ்பன் நகரின் சான்டோ அன்டானியோ பரிஷ் கவுன்சிலைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலந்தி மனிதன் போன்றும், வவ்வால் மனிதன் போன்றும் உடைகளை அணிந்துகொண்டு துப்புரவுப் பணி, தோட்ட வேலை ஆகியவற்றைச் செய்து வருகின்றனர்.
வீட்டில் உள்ள முதியோருக்கு உணவு, இன்றியமையாப் பொருட்கள் ஆகியவற்றையும் கொண்டுசென்று கொடுத்து வருகின்றனர்.
Comments